Wednesday, October 5, 2016

சித்தர்கள் பற்றி நாம் அறிந்தவையும் அறியாதவையும்:

சித்தர்களை பற்றி இன்று பலரும் பல்வேறு கோணங்களில் கூறுகின்றனர். சித்தி பெற்றவர்கள், சரணாகதி அடைந்தவர்கள், இறைவனை கண்டவர்கள், ஜீவசமாதி அடைந்து இன்றும்  உயிருடன் உள்ளவர்கள், இவைதான் சித்தர்கள் பற்றி பொதுவாக அனைவரும் ஒப்புகொண்ட உண்மை.
உண்மையில் சித்தர்கள் என்றல் யார்?
சிவன் கடவுள் இல்லை. அவர் ஒரு ஆதி சித்தன். அனைவர்க்கும் மூலமனவர். அவருக்கு தொடக்கமும் இல்லை. முடிவும் இல்லை. சிவனை தன் கடவுளாக ஏற்றுக்கொண்டு அவர் வழியில் வந்தார்கள்தான் நாம் அறிந்த சித்தர்கள். சித்தர்கள் பலர் இருந்தார்கள், இன்றும் இருகிறார்கள். அதில் குறிப்பாக 18 சித்தர்களுக்கு தனி சிறப்பு உண்டுஅவர்கள்
  1. அகத்தியர்
  2. போகர்
  3. தன்வந்திரி
  4. நந்திதேவர்
  5. கொங்கணர்
  6. சுந்தரனார்
  7. கரூவூரார்
  8. திருமூலர்
  9. கோரக்கர்
  10. குதம்பை சித்தர்
  11. இடைக்காடர்
  12. இராமதேவர்
  13. கமலமுனி
  14. சட்டமுனி
  15. வான்மீகர்
  16. பாம்பாட்டி சித்தர்
  17. மச்சமுனி
  18. பதஞ்சலி
சித்தர்கள் அட்டமா (அஷ்டமா) சித்தி யோகங்களை அறிந்தவர்கள். அட்டமா சித்திகள் மொத்தம் எட்டு, அவை,
  1. அணிமா அணுவின் அளவை போல சிறியதாகிக் கொள்ளுதல்.
  2. மகிமா அண்டத்தை போல பெரியதாகிக் கொள்ளுதல்.
  3. இலகிமா - காற்றைப் போல் இலேசாய் இருத்தல்.
  4. கரிமா - கனமாவது-மலைகளாலும், வாயுவினாலும் அசைக்கவும் முடியாமல் பாரமாயிருத்தல்.
  5. பிராப்தி - எல்லாப் பொருட்களையும் தன்வயப் படுத்துதல், மனத்தினால் நினைத்தவை யாவையும் அடைதல், அவற்றைப் பெறுதல்.
  6. பிராகாமியம் - கூடு விட்டுக் கூடு பாய்தல்
  7. ஈசத்துவம் - நான்முகன் முதலான தேவர்களிடத்தும் தன் ஆணையைச் செலுத்தல்.
  8. வசித்துவம் - அனைத்தையும் வசப்படுத்தல்.
இந்த அட்டமா சித்திகளை தியானம், யோகாசனம், பிரணாயமம் மூலம் சித்தர்கள் அடைந்தனர். இந்த சித்திகள் மூலம் சித்தர்கள் எண்ணற்ற கண்டுபுடிபுகளை நிகழ்தியுல்லனர். இன்று அறிவியல் கண்டுணர்த அனைத்துமே சித்தர்கள் அன்றே ஓலைசுவடிகளில் குறிப்பாக எழுதியுள்ளனர்.
அணுவிலிருந்து அண்டம் வரை, மருத்துவம் முதல் விவசாயம் வரை, வேதியல், இயற்பியல், ஜோதிடம், கணிதம் என அனைத்தும் சித்தர்களுக்கு அத்துபிடி. இன்று நம் விஞ்ஞானம் யோசித்திகொண்டிருகும் “teleportation’ அன்றே நிகழ்த்தி காட்டினர். அவர்கள் எழுதிய பல ஓலைசுவடிகள் அழிந்து விட்டது, இருந்தாலும் கிடைத்தவைகள் வைத்து பார்க்கும் பொழுது நமக்கு இத்தனை தகவல்கள் தெரிந்துள்ளன. ஒருவேளை அணைத்து சுவடிகளும் அழியாமல் இருந்திருந்தால், மனித குல முன்னேற்றம் இன்னும் பல படி முன்னே போயிருக்கும்.
ஒவ்வொரு காரியத்தையும் எப்படி செய்யவேண்டும், என்று மட்டும் சொல்லிய சித்தர் பெருமான்கள், அதை எதற்க்கு செய்ய வேண்டும் என்பதை ஏதோ சில காரணங்களுக்காக, நேரடியாக கூறாமல் மறைமுகமாக சொல்லியுள்ளனர். அவைகளுள் பலவற்றை நாம் தவறாக புரிந்துக் கொண்டிருக்கிறோம். இதுவே மூட நம்பிக்கையின்  ஆரம்பம். 

நம் வாழ்வின் நோக்கத்தை உணரவும், நோயின்றி வாழவும், பேராற்றலோடு இணைந்து பேரின்பம் காணவும் பல வழிகளை சித்தர்கள் விட்டு சென்றுள்ளனர்.

நம் வாழ்வின் தேடலை சித்தர்கள் விட்டு சென்ற தடயத்தின் மூலமாக அறிவதே இந்த குளுமத்தின் நோக்கம்.

சித்தர்கள் சொன்ன ஒவ்வொறு செயலுக்கும் பின்னால் உள்ள அறிவியல் உண்மைகளை அறிய, இந்த குளுமத்தில் இணையுங்கள்